ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு!

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு வரும் 20 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது.
ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு திண்டல் வித்யா நகர் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் ஏப்ரல் 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 2013 ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பு பிறந்த பெண்கள் பங்கேற்கலாம்.
இதேபோல், 19 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு ஏப்ரல் 22ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், 2006 செப்டம்பர் 1ம் தேதிக்குப் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
இதில், பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் பிறப்புச் சான்று, ஆதார், சீருடை, ஷூ, விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு இணைச் செயலாளர் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu