ஈரோட்டில் உயிரிழந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்திய பொதுமக்கள்!

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் அடிபட்டு உயிரிழந்த மயிலுக்கு பொதுமக்கள் தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் பகுதியில், ரயில்வே நுழைவு பாலம் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது இன்று இரவு மயில் ஒன்று வேகமாக பறந்து வந்து மோதியது. அந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வேகத்தில் தீப்பொறி பறக்க மிகுந்த சத்தத்துடன் மயில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.
டிரான்ஸ்பார்மரில் தீ பொறியியுடன் ஒரு சில நொடிகள் மின்சாரம் கட்டாகி மீண்டும் வந்தது. இந்த டிரான்ஸ்பார்மர் அருகே வசித்து வந்த பொதுமக்கள் உடனடியாக டிரான்ஸ்பார்மர் மீது மோதியது என்ன? என்று சென்று பார்த்தனர். அப்போது, பெரிய ஆண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மர் மீது மோதி உயிரிழந்தது தெரிய வந்தது. தனை அடுத்து உடனடியாக ஈரோடு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவம்தான் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம்போல பொதுமக்கள் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.
அதற்கு நேர் மாறாக, இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தது மட்டுமின்றி, உயிரிழந்து கிடப்பது நமது தேசிய பறவை என்பதால், அதற்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக, தேசிய கொடியை அதன் மீது போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நமது ஊரில் உள்ள மக்களுக்கு தேசிய உணர்வு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu