ஈரோடு அருகே கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்திய பொதுமக்கள்
குதிரைக்கு வளைகாப்பு செய்யப்பட்ட காட்சி.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது அம்மன்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. தங்களின் வேண்டுதலை நிறைவேற அம்மனிடம் வேண்டும் தங்களின் ஆசை நீரைவேறியுடன் அம்மனுக்கு தங்களால் இயன்ற நேர்த்திக்கடனை செலுத்திக்கடனை செலுத்துகின்றனர்.
அந்தவகையில் அவ்வூரை சேர்ந்த பக்தர் ஒருவர் கோயிலுக்கு குதிரை ஒன்றை நேர்த்திக்கடனாய் செலுத்தினார். அது நாள்முதல் அக்குதிரை அப்பகுதி மக்களின் செல்லப் பிள்ளையாய் மாறிப்போனது. இரண்டாண்டுகளாக அவ்வூரில் ஒருவராகவே மாறிப்போன அக்குதிரை கடந்த ஒன்பது மாதங்களாக கருவுற்றிருந்தது.
இதனையடுத்து குதிரைக்கு வளைகாப்பு நடத்த ஊர்பொதுமக்கள் தீர்மானித்தனர். இதனை தொடர்ந்து இன்று காலையில் கோயிலின் முன்பாக குதிரை அலங்காரம் செய்யப்பட்டு ஊர் மக்களால் ஊர்வலமாக மஞ்சள், வளையல்கள், பட்டுச்சேலை உள்ளிட்டவற்றை சீதனமாக எடுத்து வந்து குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்தனர்.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட விழாக்கள் நடத்தி பார்த்திருப்போம். ஆனால் கோயில் குதிரை ஒன்றுக்கு வளைகாப்பு நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu