ஈரோட்டில் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் கைதி தப்பி ஓட்டம்

ஈரோட்டில் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் கைதி தப்பி ஓட்டம்
X
ஈரோட்டில் பெருந்துறை சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் ஓட்டலில் சாப்பிட்ட போது கைதி தப்பி ஓடினார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூர், ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகன் ரோபிகான் (வயது 35). இவரை செல்போன் டவர் ஒயர்களை துண்டித்து திருடிய புகாரில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு போலீசார் கைது செய்தனர்.

பின்னர், மருத்துவ பரிசோதனைக்கு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். பின் ஈரோடு விரைவு நீதிமன்றம்-1ல் ஆஜர்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பெருந்துறை கிளை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். வழியில் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள ஒரு கடையில் ரோபிகானை சாப்பிட வைத்துள்ளனர்.

அப்போது, கை கழுவ சென்ற ரோபிகான் தப்பி ஓடிவிட்டார். இதனால் பதறிப்போன போலீசார், பெருந்துறை பகுதியில் பல்வேறு இடங்களிலும் ரோபிகானை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, ரோபிகானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், தப்பி ஓடிய ரோபிகானை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் ஈரோடு, பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story