ஈரோட்டில் ரூ.7 லட்சம் கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் ரூ.7 லட்சம் கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு
X

போலீசார் விசாரணை (பைல் படம்).

ஈரோட்டில் வீட்டை புதுப்பிக்க ரூ.7 லட்சம் கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் வீட்டை புதுப்பிக்க ரூ.7 லட்சம் கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி அருகே உள்ள கைகாட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 44). இவருக்கு, அறிமுகமான ஈரோடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியரான குமாரசாமி மற்றும் அவரது இளைய மகன் சிவராமன் ஆகியோர் பெரியவலசு நேதாஜி நகரில் உள்ள வீட்டை புதுப்பிக்க கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனசேகரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியத் தெரிகிறது.

இந்நிலையில், வீட்டை புதுப்பித்து விற்ற பிறகும் தனசேகருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் காலம் தாழ்த்தி, வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த 19ம் தேதி தந்தை, மகன் இருவரிடமும் தனசேகரன் பணம் கேட்க சென்றபோது, அவர்கள் இருவரும் தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தந்தை , மகன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது