அந்தியூரில் பெண்ணை மானபங்கம் செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் கைது!

அந்தியூரில் பெண்ணை மானபங்கம் செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் கைது!
X

கைது செய்யப்பட்ட கார்த்தி.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பெண்ணை மானபங்கம் செய்ததோடு, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீசார் கைது செய்யப்பட்டார்.

அந்தியூரில் பெண்ணை மானபங்கம் செய்ததோடு, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீசார் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி சவுண்டப்பூரைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 38). இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, அந்தியூர் மைக்கேல்பாளையம் தங்கம்நகரைச் சேர்ந்த 27 வயது பெண்ணுடன் கடந்த 6 மாதங்களாக முன்பு வரை கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று (நவ.7) கார்த்தி மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணிடம் தகராறு செய்தோடு, மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், இதுகுறித்து அந்தப் பெண் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது, அங்கு வந்த கார்த்தி போலீசாரின் சட்டையை பிடித்து கிழித்ததோடு, போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளார்.

மேலும், போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து, இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!