கோபி அருகே மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது

Murder Case | Erode News Tamil
X

அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சரஸ்வதி (கோப்பு படம்) -  கைது செய்யப்பட்ட பாலுசாமி.

Murder Case -கோபி அருகே, மூதாட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். செய்வினை வைத்ததால் கொன்றதாக, கொலையாளி வாக்குமூலம் தந்துள்ளார்.

Murder Case -ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையம் கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (88). மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக வசித்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வந்த போது, மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சரஸ்வதி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அவரது மகள் ராதாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த ராதா அருகில் இருந்தவர்கள் உதவிடன் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கோபி போலீசார், சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த தவசியப்பன் மகன் பாலுசாமி (வயது 45) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடியநிலையில் அவர் கோபி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட சரஸ்வதி அதே பகுதியில், கோயில் கட்டி பஜனை மற்றும் வழிபாடு நடத்தியுள்ளார். இதில், சரஸ்வதி செய்வினை வைத்ததால்தான், தனக்கு 45 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்று பாலுசாமி கருதியுள்ளார். அந்த ஆத்திரத்தில் இருந்த அவர், நேற்று காலை சரஸ்வதியை அரிவாளாலற வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் பாலுசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!