அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: டீக்கடை உரிமையாளர் உயிரிழப்பு

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: டீக்கடை உரிமையாளர் உயிரிழப்பு
X

ராமசாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், டீக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்தியூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், டீக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் நஞ்சப்பா வீதி, காளிதாஸ் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி (60). இவர் ஜீவா செட் ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தார். இவர், நேற்று மாலை தனது இரு சக்கர வாகனத்தில் அந்தியூரில் இருந்து தவிட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த ஒரு டாரஸ் லாரி இவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Next Story