ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி துவக்கி வைத்த அமைச்சர்
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியினை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு விவிசிஆர் நகரில் உள்ள குறிஞ்சி கலையரங்கில, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்கில் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமையில், நடந்த இப்போட்டியியினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கே டி சேந்தன் புகழ், மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி, மாநில விவசாய அணி செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல்.டி சச்சிதானந்தம், மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பி.எஸ் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ் எஸ் விஜயராஜன் உட்பட மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட, மாநகர பகுதி ஒன்றிய, பேரூர், வார்டு கழகச் செயலாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள 7, 9, 11,13, 17 வயதுக்குட்பட்ட இருபால் சிறுவர் சிறுமியர்கள், ஓபன் பிரிவில் வயது வரம்பின்றி போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் பங்கேற்ற 250 சிறுவர், சிறுமியர்கள் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை இந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சுழல் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu