ஆப்பக்கூடல், அத்தாணி பகுதி அம்மன் கோவில்களில் பொங்கல் விழா

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் கீழ்வாணி காமாட்சியம்மன், கருவல்வாடிபுதூர் முத்து மாரியம்மன்.
ஆப்பக்கூடல் மற்றும் அத்தாணி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் மாசி திருவிழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த கீழ்வாணியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 21ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, 26ந் தேதி கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தினமும் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
கீழ்வாணி, மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதில், காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.
அதேபோல், வேம்பத்தி ஓசைபட்டியில் உள்ள மகா மாரியம்மன், குப்பாண்டம்பாளையம் செங்காட்டுபுதூரில் உள்ள செல்வ மாரியம்மன், கருவல்வாடிபுதூரில் உள்ள முத்து மாரியம்மன், அத்தாணி ஓடைமேட்டில் உள்ள முத்து மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் மாசி திருவிழா நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu