பவானி அருகே கல்பாவியில் நாளை (மே.14) நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் 20ம் தேதிக்கு மாற்றம்!

பவானி அருகே கல்பாவியில் நாளை (மே.14) நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் 20ம் தேதிக்கு மாற்றம்!
X
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கல்பாவி கிராமத்தில் நாளை (மே.14) புதன்கிழமை நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் வரும் 20ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

பவானி அருகே கல்பாவி கிராமத்தில் நாளை (மே.14) புதன்கிழமை நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் வரும் 20ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், குறிச்சி உள்வட்டம், கல்பாவி கிராமம், கல்பாவி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை மே.14ம் தேதி புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற இருந்தது.

தற்போது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, மே 2025ம் மாதத்திற்கான மனு நீதி நாள் முகாம் கல்பாவி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வரும் மே.20ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் பொது மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story