ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தேடி அலைந்த தொழில் அதிபர்!

ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தேடி அலைந்த தொழில் அதிபர்!
X
ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தொழில் அதிபர் தேடி அலைந்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தொழில் அதிபர் தேடி அலைந்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்தவர் சதீஸ். தொழில் அதிபர். இவர் ஆப்பிரிக்கன் கிரே பேரட் என்ற சாம்பல் நிற கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது. அந்த கிளியை அவர் தேடியும் கிடைக்காததால் தவித்து போன அவர், கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டர் ஒட்டினார்.

இந்தநிலையில், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் மரத்தில் தான் வளர்த்து வந்த கிளி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அந்த கிளி உரிமையாளரை கண்டதும் தோளில் வந்து அமர்ந்த கிளியை அவர் மீட்டு கொஞ்சினார். தற்போது, அவரிடம் கிளி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story