பவானி அருகே உள்ள ஊராட்சிகோட்டை மலையில் ஏற்பட்ட தீ விபத்து

பவானி அருகே உள்ள ஊராட்சிகோட்டை மலையில் ஏற்பட்ட தீ விபத்து
X

பவானி ஊராட்சிக்கோட்டை மலையில் செடிகள் தீப்பற்றி எரியும் காட்சி

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிகோட்டை மலையில் ஏற்பட்ட தீ விபத்தினை 2 மணி நேர போரட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சிகோட்டை மலை உள்ளது.இந்த மலை மேல் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு கீழ் பகுதியில் புதரில் இருந்து மாலை நேரத்தில் புகையுடன் நெருப்பு பற்றி எரிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் செல்லமுடியததால் தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று செடிகளை கொண்டு தீயணைப்பு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு ஏக்கர் பரப்பளவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.அதிருஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. மேலும் யாரேனும் மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்தார்களா அல்லது மேலே செல்லும் மின்கம்பி உராய்வு காரணமாக தீ விபத்து நேரிட்டதா என தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பவானி வட்டாச்சியர் முத்துகிருஷ்ணன் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினரிடம் கேட்டறிந்தார்.ஊராட்சி கோட்டை மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!