ஈரோடு பூம்பூகாரில் பித்தளை, செம்பு கலை பொருட்கள் கண்காட்சி, விற்பனை துவக்கம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா அருகே மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் பித்தளை மற்றும் செம்பு கலைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா அருகே மேட்டூர் சாலையில் அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில், பித்தளை மற்றும் செம்பு கலைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.
இதுகுறித்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் கூறியதாவது, தமிழகம் மற்றும் தென்னிந்திய அளவிலான கலையழகு மிக்க பித்தளை சுவாமி சிலைகள், விளக்கு கள் விளக்குகள், உருளி, புத்தர் சிலைகள், கோமாதா சிலைகள், வீரவாள், முக்காலிகள், செம்பினால் ஆன சிலைகள், தண்ணீர் பாட்டில்கள், டம்ளர், தட்டுகள், செம்பு போன்றவை விற்பனைக்கு உள்ளன.
பஞ்சலோகம் மரம், கற்களால் ஆன சிற்பங்கள், மொராதாபாத் கலைப்பொருட்கள், ஜெய்பூர் ஓவியங்கள், தஞ்சை ஓவியம், தஞ்சை கலைத் தட்டு, ஆயில் பெயிண்டிங், வலம்புரி சங்கு,அகர்பத்தி, வாசனை திரவியங்கள்,ரோஸ்மரத்தில் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார அலங்கார பேனல்கள், சந்தனக்கட்டை, கலைப்பொருட்கள் போன்றவை விற்பனைக்கு உள்ளன.
இங்கு ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கைவினை பொருட்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. இக்கண்காட்சி வருகிற 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu