ஹோலி பண்டிகை: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் விடுமுறை

ஹோலி பண்டிகை: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் விடுமுறை
X
ஹோலி பண்டிகையையொட்டி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் (மார்ச் 14ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகையையொட்டி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் (மார்ச் 14ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நாளை மறுநாள் (மார்ச் 14ம் தேதி) வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை என்பதால் அன்று மஞ்சள் ஏலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று வணிகர்கள் ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் பங்கேற்க மாட்டார்கள் என்றார்.

Next Story