16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
X

தங்கவேல் என்கிற சிவா.

16 வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16 வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (எ) சிவா (22). இவர் சிப்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி, சித்தூரை பூர்விகமாக கொண்ட 16 வயது சிறுமி தன் பெற்றோருடன் ஈரோட்டில் வசித்தார்.

ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமியை தொடர்ந்து, பேசி பழக்கப்படுத்திய தங்கவேல் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, ஆசை வார்த்தை கூறி பைக்கில் கடத்திச் சென்று, ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருக்கும் நண்பரின் அண்ணன் வீட்டுக்கும் அழைத்துச் சென்று, அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீண்டும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சாமி படத்தின் முன்பாக அந்தச் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

இந்த நிலையில், சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2019, ஜூலை 14ம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த தங்கவேல் (எ) சிவாவை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் அளித்த தகவலில் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, அவர் சிறுமி என தெரிந்தும் அவருக்கு தாலி கட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இறுதிக் கட்ட விசாரணை முடிந்து, ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், தங்கவேல் (எ) சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.

Tags

Next Story