அந்தியூர் அருகே பருவாச்சியில் கார் மோதி அடியோடு சாய்ந்த மின்கம்பம்!

அந்தியூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோடு வேட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. இவருடைய மகன் சரவணன். இருவரும் அந்தியூர் கால்நடை சந்தைக்கு மாடு வாங்குவதற்காக நேற்று முன்தினம் சென்றனர்.
பின்னர், நேற்று அதிகாலை ஈரோட்டுக்கு காரில் திரும்பினர். காரை சரவணன் ஓட்டினார். அப்போது, பருவாச்சியில் உள்ள எச்பி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது காரின் பின்புற டயர் திடீரென பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக கார் மின்கம்பத்தில் மோதியதும் மின்கம்பிகள் அறுத்ததால் மின்சார இணைப்பு கட் ஆனது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், துரைசாமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் கிடைத்து அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின் கம்பத்தையும், அறுந்து கிடந்த மின் கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu