அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்!

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் உயிர் தப்பினார்!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை சாலை வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து பெருந்துறை மரபாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று (மே.4) காலை 7 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பிலலேகரேனஹள்ளியை சேர்ந்த சையத் சதாத் (வயது 29) என்பவர் ஓட்டினார்.

லாரி பர்கூர் - தாமரைக்கரை சாலையில் சுண்டப்பூர் பிரிவு பகுதியில் வந்தபோது திடீரென லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் சையத் சதாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்ததும், பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

Next Story