74 கடைகளுக்கு ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் (பைல் படம்).
Erode Today News, Erode Corporation Today News, Erode City News - ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வாடகைத்தொகை கட்டாத 74 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், முன்னுரிமை மற்றும் பொது ஏலம் முறையில், 290-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொது ஏலம் முறையில் 74 கடைகள் இயங்கி வருகின்றன. பொதுது ஏலம் முறையில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரத்து 540 (18 சதவீதம் ஜி.எஸ்.டி உள்பட) வாடகைத்தொகை வசூலிக்கப்பட்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், 74 கடை வியாபாரிகளும், கடந்த 10 மாத வாடகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, வியாபாரிகள் தலா ரூ.35 ஆயிரத்து 500 என்ற அடிப்படையில், 74 வியாபாரிகளும், மொத்தமாக ரூ.26 லட்சத்து 19 ஆயிரத்து 600ஐ செலுத்தப்பட வேண்டும். இதனால், வாடகைத்தொகையை உடனடியாக செலுத்தக் கோரி, வியாபாரிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu