வாய்க்கால் கரையில் தவறி விழுந்த விவசாயி பலி

வாய்க்கால் கரையில் தவறி விழுந்த விவசாயி பலி
X
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் விவசாயி பிணமாக மீட்பு.

கோபி அடுத்த வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 42). இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த போது ஒரு விவசாயியின் பாக்கு தோப்பிற்கு செல்லும் வழியில் கூகலூர் கிளை வாய்க்கால் கரையோரம் புல் கட்டுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரும் வழியில் இறந்தார். கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story