அந்தியூர்: கீழ்வாணி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா!

அந்தியூர்: கீழ்வாணி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கீழ்வாணியில் உள்ள அரசு பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

அந்தியூர் அருகே கீழ்வாணியில் உள்ள அரசு பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே உள்ள இந்திராநகரில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியை கே.எம்.விஜயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். இடைநிலை ஆசிரியை அ.சசிகலா ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவை, வட்டார கல்வி அலுவலர் எஸ்.அபிராமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், அரசு பள்ளிகளில் செயல்பாடுகள் கல்விக்காக தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், வரும் காலங்களில் மாணவ-மாணவிகள் தங்களின் வளர்ச்சி பாதையை குறிக்கோளாக கொண்டு அரசு பள்ளியில் கல்வி கற்க வேண்டும் என்றும் பேசினார்.


இதைத் தொடர்ந்து, விழாவில், டாக்டர்.கே.சி. கிருபா, முன்னாள் தலைமையாசிரியர்கள் வை.வேலுச்சாமி, எஸ்.ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் எஸ்.சண்முகப்பிரியா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் து.நடராஜ், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கே.கே.ராமசாமி, எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவையொட்டி, முன்னதாக பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை, அத்தாணி ஓடைமேடு பள்ளி தலைமையாசிரியர் கீ.மா.சுந்தரம் தொகுத்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா முடிவில், அத்தாணி ஓடைமேடு பள்ளி இடைநிலை ஆசிரியை அ.அருணா நன்றி கூறினார்.

Next Story