ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அஞ்சலி
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 37ம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிச.24) கடைபிடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் எம்ஜிஆரின் 37ம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிச.24) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ,அவரது படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்காவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்வி, மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஈகிள் சதீஷ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பொன் சேர்மன், பகுதி செயலாளர் ஜெய பாலாஜி, வக்கீல் அணி மாவட்ட இணை செயலாளர் துரை சக்திவேல், அண்ணா தொழிற்சங்க தலைவர் மாதையன், துணைச் செயலாளர் திண்டல் சண்முகசுந்தரம், தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு மாநில தலைவர் மின் மணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜ் அ.தி.மு.க. பிரதிநிதி முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் வீரா செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் கோபி ரவுண்டானா அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் மலர்தூவி மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினார். இதில், ஈரோடு புறநகர் மாவட்ட பொருளாளர் கே.கே.கந்தவேல் முருகன், கோபி ஒன்றியச் செயலாளர்கள் குறிஞ்சிநாதன், வக்கீல் வேலுமணி, கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன், மகளிர் அணி சத்தியபாமா, மாணவரணி அருள் ராமச்சந்திரன், மருத்துவ அணி ஆண்டமுத்து, கோபி மகளிர் அணி தமிழ்ச்செல்வி, கோபி நகர துணை செயலாளர் ஜி.ஆர்.இளங்கோவன், நகர இளைஞரணி ஜி.எம்.விஸ்வநாதன், நகர மாணவரணி சோன்பப்படி செல்வம், நகர பேரவை செயலாளர் விஜய் (எ) விஜயகுமார், வர்த்தக அணி சிவகுமார், கொளப்பலூர் பேரூர் கழகச் செயலாளர் தங்கராசு, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்து ரமணன் மற்றும் அனைத்து சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பவானி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.கருப்பணன் இல்லத்தில் எம்ஜிஆரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பவானி விவசாய அணி ஒன்றிய செயலாளர் கே.சி.கணேஷ், பவானி ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நல்லி விவேகானந்தன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் மனோகரன், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாபா தங்கமணி, கவுந்தப்பாடி பேரூர் கழக முன்னாள் செயலாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் சத்தி பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமையில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சிவராஜ், மாரப்பன், முன்னாள் நகர கிருஷ்ணராஜ், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் பவுல்ராஜ், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் ஜீவாமணி, இணைச்செயலாளர் பிரபாகரன், அரியப்பம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் தேவமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை சட்டமன்ற வடக்கு, கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அவரது படத்திற்கு பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி (எ) ரஞ்சித் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் அங்கிருந்து வைகை தம்பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு பங்களா வீதி, கடைவீதி, குன்னத்தூர் ரோடு வழியாக, குன்னத்தூர் நால்ரோடு பகுதியை வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவ படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஐந்து நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu