ஈரோடு மாவட்டத்தில் 36 வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்.11) நடக்கிறது
பைல் படம்
Free Vaccination Camp -இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, பூஸ்டர் செலுத்திக் கொள்ளாதவருக்கு உதவ வசதியாக செப்டம்பர் மாதம், நான்கு மெகா முகாம்களை சுகாதாரத்துறை நடத்துகிறது. அவ்வகையில் கடந்த 4ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 35வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,597 இடங்களில் நடந்தது. 12,001 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி உட்பட 21,807 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், நாளை (செப்.11) மாவட்டத்தின் 1,597 இடங்களில் மெகா முகாம் நடக்க உள்ளது. இம்முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கும், இதில், 18 வயது நிறைவுடைந்த இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர், முதல் தவணை செலுத்தி விட்டு இரண்டாம் தவணைக்கு காத்திருப்போருக்கு தடுப்பூசிசெலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu