ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 31வது விளையாட்டு விழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு விழா பரிசளிப்பில் எடுக்கப்பட்ட படம்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 31வது விளையாட்டு விழா இன்று (மார்ச் 6ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 31வது விளையாட்டு விழா இன்று (மார்ச் 6ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் மற்றும் கொங்கு நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்திய கைப்பந்து அணியின் வீரர் ஆர்.ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, விளையாட்டுத் துறை மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் மிகவும் அவசியமென்றும் வாழ்வில் கடினப்படும் எந்த முயற்சிக்கும் வெற்றி நிச்சயம் உண்டு என்ற தலைப்பில் தனது அனுபங்கள் பற்றி பேசினார்.
முன்னதாக, கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து, கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கே.எம்.பிரகாஷ்ராஜ் 2024-2025ம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறையின் ஆண்டறிக்கையை வாசித்தளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி, மாவட்டம், மண்டலம், பல்கலைக்கழகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழா நிறைவாக வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் கே.பி.கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu