ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா கோலாகலம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா கோலாகலம்
X

கொங்கு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 31வது ஆண்டு விழா இன்று (மார்ச் 7ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 31வது ஆண்டு விழா இன்று (மார்ச் 7ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 31வது ஆண்டு விழா இன்று (மார்ச் 7ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் ஆர்.குமாரசுவாமி தலைமை தாங்கினார்.


கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் 2024-2025ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா, அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலர் பி.சச்சிதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த ரூட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மாணவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு சமுதாயத்தையும் உறவுகளையும் பேணிக் காப்பதோடு பெற்றோர்களை மதித்து நடப்பதே சமுதாயத்திற்குச் செய்யும் சேவை என்றார்.


பின்னர், பல்வேறு துறைகளில் நூல் வெளியிட்ட ஆசிரியர்களுக்கு பரிசும் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களில் தங்கள் துறைகளில் தடம்பதித்த மாணவர்களுக்கு சிறந்த மாணவர் விருதும் வழங்கப்பட்டது.

பிறகு கல்வி, கலை, தனித்திறன்கள் என பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பட்டது.


இவ்விழாவின், ஒருங்கிணைப்பாளர் கே.எம்.குமரகுரு வரவேற்புரையும், உள்தர உறுதிப்பாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ஏ.அழகுஅப்பன் நன்றியுரையும் ஆற்றினர். முன்னதாக, மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story