ஈரோடு மாவட்டத்தில் நாளை 14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X
ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 475 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 3-ம் அலை பரவலைத் தடுக்க மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை (11-ம் தேதி) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள்,பள்ளிகள் என 475 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில் 1,900 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!