அந்தியூரில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

அந்தியூரில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
X
அந்தியூர் மைக்கேல்பாளையத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு தினம் இன்று தமிழகம்‌ முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தியூர் ஒன்றியம் மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில், உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாண்டியம்மாள்,அந்தியூர் பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ்,அந்தியூர் பேரூர் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம்,ஒன்றிய அவைத் தலைவர் காளிமுத்து, அந்தியூர் ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சித்தமலை, குப்பாண்டம்மபாளையம் ஊராட்சி கழக முன்னாள் செயலாளர் சுப்பிரமணியம், நகலுர் ஊராட்சி கழக முன்னாள் செயலாளர் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!