ஈரோட்டில் நாளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோட்டில் நாளை ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
X

மாதிரி படம் 

ஜி.எஸ்.டி வரி உயர்வுககு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை அடையாள வேலை நிறுத்த அறிவிப்பு.

ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

நூல் விலை உயர்வு பிரச்னை தீர்வு காணப்படாத நிலையில், காட்டன் ரகங்களுக்கு, 12 சதவீதமாக ஜி.எஸ்.டி., உயர்த்தப்பட்டது. ஜவுளி தொழிலில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வரி உயர்வை திரும்ப பெறக்கோரி நாளை ஈரோட்டில் ஜவுளி சார்ந்த சங்கங்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் நாளை 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்படுகின்றன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் முடங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசைத்தறி உற்பத்தியாளர்களும் நாளை ஒருநாள் தங்களது உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future