ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க கோரி 200 விண்ணப்பம்
பட்டாசு கடை (பைல் படம்)
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கோரி 200 விண்ணப்பங்கள் வந்து இருப்பதாக தீயணைப்பு துறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு இல்லாமல் தீபாபளி பண்டிகை நிறைவு பெறாது. ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமை கோரி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள் விதிகள் 2008ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தினை அணுகி ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழி வகை செய்யப்பட்டிருந்தது. விண்ணப்பங்களை வரும் கடந்த மாதம் 30ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்றும், 30ஆம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் ஒப்புகை சீட்டுடன் புல வரைபட நகல்கள் 6, கிரைய பத்திர நகல்கள் 6, சேவை கட்டணம் ரூ.500 செலுத்திய ரசீது, முகவரிக்கான ஆதாரம், சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடவு சீட்டு அளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது எனில், தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் விண்ணப்பித்தவா்கள் இணையதளம் மூலமாகவே தெரிந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தீபாவளி பண்டிகை வருகின்ற 24ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் கடந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்களுக்கு அளிக்கும் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் உரிய ஆய்வு செய்து பின்னர் அனுமதி வழங்கப்படும்
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 200 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறையினரின் தடையின்மை சான்று கோரி வந்துள்ளது. இந்த 200 விண்ணப்பங்களும் மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
அந்தந்த தீயணைப்பு நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்றினை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகு வழங்குவர். வணிக வளாகம், திருமண மண்டபம், பெட்ரோல் பங்க் அருகில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு கடை வைக்க தடையின்மை சான்று வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu