ஈரோடில் வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி

ஈரோடில் வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி
X

கார்த்திக்.

பெருந்துறை அருகே காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஆர் எஸ் ரோடு, வீசிவி நகர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகள் சௌமியா (வயது 28). இவர் பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோயிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரை, ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிவநாதன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 31) காதலிப்பதாக கூறி, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, காஞ்சிக்கோவில் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட கார்த்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்துள்ளார். தற்போது மீண்டும் இவர் பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் மூலம் தொல்லை கொடுத்து வந்த நிலையில், நேற்று காலை சௌமியாவின் வீட்டு அருகே வந்து நின்று கொண்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை சுற்றிவளைத்து பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!