கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயமாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சர்தார். இவரது மனைவி சாஜிதா பேகம் (வயது 22). இவர்களுக்கு கடந்த 6 மாங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி கோபியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது வீட்டின் அருகே உள்ள உறவினர் ஒருவரின் பூக்கடையில் பூ கட்டும் வேலையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், பூக்கடையில் வேலை செய்து விட்டு, வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. மேலும், ஈரோடு செல்லும் பேருந்தில், ஏறி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அவரது கணவர் அப்துல்சர்தார் அளித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story