கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு
X

ரேணூகாதேவி

கோபிசெட்டிபாளையம் அருகே, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இளம்பெண் தீக்குளித்து காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் நாகராஜ். இவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ் மகள் ரேணூகாதேவிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரகதி என்ற 7 வயது மகளுக்கும், பிரதன்யா என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், நாகராஜீன் தங்கை கவிதாவின் மகள் காவியா, விடுமுறைக்காக நாகராஜீன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, காவியா மற்றும் பிரகதிக்கு புது துணி வாங்கியுள்ளனர். துணி பெரியதாக இருக்கவே நாகராஜீன் தந்தை கோவிந்தசாமி துணியை டெய்லர் கடைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். இதுதொடர்பாக கோவிந்தசாமிகற்கும், ரேணுகாதேவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த ரேணுகாதேவி, வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ரேணுகாதேவியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!