கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பூலம்மாள்.

கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் மணியகாரன்பாளைத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி பூலம்மாள். இவர்களுக்கு ரவி என்ற மகனும், ஜெயவர்ஷினி என்ற மகளும் உள்ளனர். செல்வக்குமாரும், பூலம்மாளும் கோபியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பூலம்மாளின் தாயார் ராஜம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள தாயாரை பார்ப்பதற்காக சென்ற பூலம்மாள் பின்னர், வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், செல்வக்குமார் அளித்த புகாரில் பேரில் கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!