தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை மனு

தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை மனு
X

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த ஆசிரியை பிரபா.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகர்பாளையம், நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் பிரபா. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இன்று (டிச.4) புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ஈரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் வி.எஸ்.முத்துராமசாமி என்பவர் கடந்த 16-11-2024 அன்று 100 அடியாட்களுடன், 3 லாரிகளில் வந்து, எனது வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் நகைகளையும் எடுத்து சென்று விட்டார்.

அப்போது அதை தடுத்த எனது மகள் மற்றும் தாயாரையும் தாக்கியதுடன், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியும், தகாத வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து, நான் கோபி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். அதன்பேரில் காவல்துறையினர் முத்துராமசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், வழக்குப் பதிவு செய்து 17 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், முத்துராமசாமி இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்து எனக்கு தகுந்த நீதி வழங்கிட வேண்டும்.

மேலும், முத்துராமசாமி எடுத்துச் சென்ற எனக்கு சொந்தமான பொருள்களை மீட்டுத் தரவும், எங்களது குடும்பத்தினர் உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!