ஈரோடு லக்காபுரம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு லக்காபுரம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்
X

ஈரோடு லக்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு கண்டறிதல் முகாமில் எடுத்த படம்.

ஈரோடு லக்காபுரம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஈரோடு லக்காபுரம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் லக்காபுரம் துணை சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.16) நடைபெற்றது.


முகாமில், காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்குமிடங்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மரு.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு சிறப்புற நடைபெற ஆலோசனைகளை வழங்கினார்.


இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் ,செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மார்பக நுண்கதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story