சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
X

அரியப்பம்பாளையம் நேருநகரில் நடந்த காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பகுதியில் காச நோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பகுதியில் காச நோய் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் நேருநகர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் பொதுமக்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின் படி, நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் நுண்கதிர் பட ஊர்தியின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம்,கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், சுற்றுப் புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், மழைக்கால நோய்கள் அதன் தடுப்பு முறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள் குறித்து சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி மாணிக்கம், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மாணிக்கம், சுப்பிரமணியம், விஜயா மற்றும் ஊர் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!