நகர்புற உள்ளாட்சி தேர்தல: ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல: ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் பிப் 17ஆம் தேதி முதல் 19 வரை மற்றும் 22 ஆம் தேதி வரை விடுமுறை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் மற்றும் 22ஆம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி , நகராட்சி மற்றும் மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும், அதைச்சுற்றியுள்ள 5 கி.மீ தூரத்திற்கு உள்ள 179 டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் , வரும் 17ஆம் தேதி காலை முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், அதற்கு அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள 57 டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வரும் 22ஆம் தேதியும் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்வதோ, பார்களை திறப்பதோ அல்லது அவற்றை தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு எடுத்து செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு