அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
X

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மூடப்பட்ட மதுபான கடை.

அந்தியூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்புற தேர்தல் நடைபெற உள்ளது.நகர்ப்புற தேர்தலை அமைதியான முறையிலும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இன்று முதல், அதாவது 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!