ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வருகின்ற 15ஆம் தேதி (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுபான கூடங்கள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!