பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் பொன்.பாரதி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி, பொதுச்செயலாளர் பாண்டியன், சம்மேள குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுந்தரராஜன் வாழ்த்துரை கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும், உரிமம் இல்லாமல் செயல்படும் மதுக்கூடங்களை மூட வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுப்பணி இடமாறுதலை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!