ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
X

ஈரோட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தபோது, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (டிச.19) வியாழக்கிழமை வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (டிச.19) வியாழக்கிழமை வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சோலாரில் நாளை (டிச.20) வெள்ளிக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) வியாழக்கிழமை மதியம் ஈரோடு வந்தார்.


முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோரும் வரவேற்றனர்.

இதையடுத்து, சாலை வழியாக காரில் புறப்பட்ட முதல்வருக்கு ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், எம்பிக்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தொடர்ந்து, பெருந்துறை வந்த முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். முதல்வர் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக, 20 இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நஞ்சனாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். பின்னர், இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.

Tags

Next Story
Similar Posts
ஸ்கிப்பிங் செய்தால் மூட்டு வலி வருமா?..என்னடா சொல்றீங்க!
ஆரோக்கியத்தை வளமாக்கும் மக்கானா..! தாமரை விதைகளின் அற்புத பலன்கள்..!
காலைல இத ரெண்டு கப் சாப்பிடுங்க.. ஈஸியா எடை குறைய டிப்ஸ்..!
ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு கருவாடும் ஊற வெச்ச சோறும்..உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் கருவாடு!
அறச்சலூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு, புகையிலை விழிப்புணர்வு முகாம்
மூட்டு வலிக்கு நீங்காத தீர்வு..! மகிழ்வை திருப்பி தரும் முடவாட்டுக்கால் கிழங்கின் அதிசய குணங்கள்..!
அந்நியன் மாதிரியே அட்டகாசமான ஒரு படம்.. ஆனா அங்கதான் டிவிஸ்ட்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கிய முதல்வர்
ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடுவது பசிக்கு தீர்வா அல்லது தீங்கா?..
பூனைகாலி அப்படினா என்ன..? உடலுக்கு இவ்வளவு நல்லதா..?
நீங்க ஒழுங்கா தூங்குறீங்களா? உங்க குழந்தைங்க....! கட்டாயம் கவனிங்க..!