பவானி அருகே தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பேரவை கூட்டம்

பவானி அருகே தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பேரவை கூட்டம்
X
பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.
பவானி அருகே நடைபெற்ற தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகரில் பவிஷ்பார்கில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் சாந்தா வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு பவானி அம்மாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் அரசிடம் வைத்து சலுகைகள் பட்டியலிடப்பட்டது.

தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துணை மையத்திற்கு இலவச குடியிருப்பு மின்சாரம் வழங்க வேண்டும். மகப்பேறு சிசு இறப்பு முழு பொறுப்பு செவிலியர்க்கு என்பதை கைவிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பதிவு ஏடுகள் பராமரிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself