/* */

60 இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்:அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள 60 அரசு குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

HIGHLIGHTS

60 இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்:அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 253-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி , தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி , சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு 1 கோடியே 83 லட்சம் ஒதுக்கீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள 193 அரசு குடியிருப்புகளில் 60 இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அந்த 60 இடங்களை இடித்த விட்டு புதியதாக வீடுகள் கட்டப்படும் என்றார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசு தரமான குடியிருப்புகளை கட்டி கொடுத்தாலும் குடியிருப்புவர்கள் அதை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றார்.

Updated On: 28 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!