பவானியில் திமுக-விசிகட்யினர் இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை

பவானியில் திமுக-விசிகட்யினர் இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை
X

தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விசிகட்சியினர்.

கவுந்தப்பாடி திமுக வடக்கு மாவட்ட அலுவலகங்கத்தில் இட ஒதுக்கீடு குறித்து விசிகட்சியினர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தப்பாடி திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வியுகம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளூவன் எடுத்து கூறினார்.

இதில், விசிகட்சியின் மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் அலெக்ஸ், கோபி சட்டமன்ற தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பவானி நாகராஜ், பவானி ரஞ்சித், கோபி நகர செயலாளர் ஆனந்த் , ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் சண்முகம், பவானி நகரச் செயலாளர் முடியரசன், பவானி கண்ணன் மேற்கு மாவட்ட இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட துணை செயலாளர் சில்வர், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ் வளவன், ஒலகடம் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself