கோபிசெட்டிபாளையம் அருகே வெளி மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே வெளி மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் (பைல் படம்)

கோபிசெட்டிபாளையம் அருகே, கேரளா மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் ரியாஸ். இவர் பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த ரியாஸ், பெங்களூரில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனது. இதனால், மனமுடைந்த நிலையில், ரியாஸ் கோபி பஜானை வீதியில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த விஜி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாதபோது, ரியாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!