அந்தியூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

அந்தியூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
X

பார்த்திபன்

அந்தியூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23). பொறியியல் பட்டதாரி. இவர், குடும்பத்தோடு கடந்த சில மாதங்களாக அந்தியூர் பெரியார் நகரில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தனது அம்மாவிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பிறகு, மீனவர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!