கள்ளிப்பட்டி அருகே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கள்ளிப்பட்டி அருகே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
X
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், கூலித்தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை எரங்காட்டூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 47). கூலித்தொழிலாளி. இந்த நிலையில், சொந்த வேலை காரணமாக பழனிச்சாமி தனது இருசக்கர வாகனத்தில் தண்ணீர்பந்தல் நோக்கி அத்தாணி- பங்களாப்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, தண்ணீர்பந்தல் ஊட்டிகாரர் தோட்டம் அருகே வந்த போது, எதிரே வந்த ஆம்னிவேன் மீது மோதியுள்ளார்.

இதில் கீழே விழுந்ததில் பழனிச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனே, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!