பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் பாஜகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

BJP Protest | Erode News Tamil
X

பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் பவானி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

BJP Protest -சொத்துவரி உயர்வு ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் பாஜகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BJP Protest -ஈரோடு மாவட்டம், பவானி நகர்மன்றத்தின் சாதாராணக் கூட்டம் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் சி.மணி, ஆணையாளர் எம்.தாமரை, பொறியாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விவாதங்கள் முடிவடைந்த நிலையில் நகராட்சி அலுவலகத்துக்கு பாஜக நகரச் செயலாளர் நந்தகுமார் மற்றும் 20 பேர் கைகளில் கொடிகளுடன் சென்று வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

இதுதொடர்பாக, நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி போலீஸார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.

இந்நிலையில், நகர்மன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த பாஜகவினர் அவமதிக்கும் வகையிலும், ஆணையாளர் மற்றும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டனர். எனவே, இச்செயலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!