ஈரோடு மாவட்டம்: நாளை பிளஸ்-2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது

ஈரோடு மாவட்டம்: நாளை பிளஸ்-2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது
X

மாதிரிப்படம்.

ஈரோடு மாவட்டத்தில் 104 மையங்களில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்தாண்டு பிளஸ்-2 தேர்வுகள் திட்டமிட்டப்பட்டி நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அதன்படி, நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 909 பேர் எழுதுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 104 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.மேலும் தேர்வில் முறைகேடுகளை தடுக்க 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தனித்தேர்வர்களுக்காக 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself