ஈரோடு மாணவிக்கு ரூ.3 கோடி உதவித்தொகையுடன் சிகாகோ பல்கலைகழகத்தில் படிப்பு

ஈரோடு மாணவிக்கு  ரூ.3 கோடி உதவித்தொகையுடன் சிகாகோ பல்கலைகழகத்தில் படிப்பு
X

தாய் தந்தையுடன் மாணவி ஸ்வேகா.

17 வயது மாணவிக்கு சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படிக்க ரூ.3 கோடி மதிப்பிலான உதவித்தொகையை பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன்- சுகன்யா தம்பதியினரின் மகள் ஸ்வேகா. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும், ஸ்வேகாவுக்கு மூன்று கோடி ரூபாய் உதவித்தொகையுடன் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்துள்ளது. டெக்ஸ்டெரிட்டி குளோபல் பள்ளி நிர்வாகி சரத் என்பவரின் மூலம் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்ட மாணவி ,10 ஆம் வகுப்பு முதலே அவரிடம் ஆன்லைனில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அதன் பயனாக ஸ்வேகாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!